தென்னை நாற்றங்கால்
நடவுப் பொருள்
விதைப் பண்ணை தேர்வு
- பண்ணையானது அதிக
எண்ணிக்கையில் நன்கு
காய்க்கும் மரங்களை
கொண்டதாக இருக்க
வேண்டும். மேலும் பூச்சி
மற்றும் நோய்
தாக்குதலின்றி இருக்க
வேண்டும். - வீடு, மாட்டுத் தொழுவம்,
மாட்டு எருக்குழிகள் அருகில் உள்ள
மரங்களை தவிர்க்கவும்.
தரமான விதைத் தேங்காய் மற்றும் கன்றுகளுக்கு பெயர் வாய்ந்த சில இடங்கள் உள்ளன. எ.கா: குட்டியடி (கோழிக்கோடு),
சாவக்காடு (திருச்சூர்),
ஆழியார் நகர் (கோயம்புத்தூர்), வேப்பங்குளம் (தஞ்சாவூர்).
தாய் தென்னை தேர்வு
நல்ல தரமான நாற்றுகள் உற்பத்திக்கு, தகுந்த
இரகத்திலிருந்து தரமான தாய்தென்னையை தேர்வு செய்வது முக்கியமானதாகும். தகுந்த
விதையில்லா இனப்பெருக்க முறை இல்லாத நிலையில் விதை இனப்பெருக்கமே சிறந்த வழி. எனவே
தாய்தென்னையை தேர்வு செய்வதே தென்னங்கன்றுகள் உற்பத்திக்கு முக்கிய காரணி ஆகும்.