அனாகைரஸ் லோபசி
மரவள்ளி மாவுப்பூச்சி ஒட்டுண்ணி
உற்பத்தி குடில் அனாகைரஸ் லோபசி என்பது மத்திய அமெரிக்காவை சேர்ந்த ஒட்டுண்ணி குளவி
இனமாகும். இது மரவள்ளி கிழங்கில் மாவுப்பூச்சியை
கட்டுப்படுத்தும் முகவராக செயல்படுகிறது. இதனை
எளிதாக அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும்.
பச்சை கூடாத்தில் மரவள்ளி
செடிகளை வளர்க்க வேண்டும். பின்னர் நன்கு வளர்ந்த மரவள்ளி செடிகளில் மரவள்ளி மாவுப்புச்சியை
இட்டு மாவுப்புச்சியை அதிகளவில் அதன் எண்ணிக்கையை பெருக்க வேண்டும். தாய் ஆண் மற்றும் பெண் அனாகைரஸ் லோபசி குளவிகளை (10 எண்கள்) மரவள்ளி மாவுப்பூச்சி
தாக்கப்பட்ட செடிகள் மீது வெளியிடலாம். மாவுப்பூச்சியின்
மீது ஒட்டுண்ணிகள் வெளியிடப்பட்ட 3.5 நாட்களுக்குப் பிறகு மரவள்ளி செடிகளை அகற்றி,
பெரிய ஒட்டுண்ணிகள் தோன்றும் வரை ஒரு கூண்டு அரவலை அமைப்பில் வைக்கலாம். சுமார் 18 முதல் 20 நாட்களுக்கு பிறகு பெரிய ஒட்டுண்ணிகள்
வெளிப்படும். இந்த ஒட்டுண்ணி குளவிகளை ஆஸ்பிரேட்டர்
மூலம் சேகரித்து, கள வெளியீட்டுற்கு பயன்படுத்தலாம்.