மண்புழு உரம் தயாரித்தல்
சில்பாலின் முறை
மண்புழு என்பது இயற்க்கையின் மிகப் பெரிய சக்திகளில் ஒன்றாகும். இந்த புவியில் சுமார் 112 மில்லியன் வருடங்களுக்கு முன்னதாகவே இருந்து மண்புழுக்கள் வாழ்ந்து வருகின்றன. இவை வேளாண் மற்றும் கால்நடை அங்கக கழிவுகளை மட்கவைத்து உரமாக்கி மீண்டும் பயிர்களுக்கு கிரகித்துக்கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்கின்றன. இதனால் வளம் குன்றிய பண்ணயை பேணிகாப்பதே மண்புழு உரத்தின் முக்கியத்துவம் மற்றும் முதண்மையான பயனாகும்.
சில்பாலின் பை அளவு மற்றும் கொள்ளவு:
12 x 4 x 2 அடி (நீளம், அகலம், உயரம்) மற்றும் 1 டன் கொள்ளவு.
மண்புழு உரம் தயாரிக்க மூலப்பொருட்கள்:
மக்கிய சாண எரு கழிவுகள், விவசாய (அ) வேளாண் கழிவுகள், சாண எரிவாயு கலன் சாணம், கால்நடை கழிவுகள், காய்கறி மற்றும் உணவு கழிவுகள்.
மண்புழு வகை:
யூடிரிலஸ் யூஜீனே (ஆப்பிரிக்கா வகை) கழிவுகளின் மேற்புறத்தில் இருந்து உண்ணும்.
செய்முறை:
- நிழல் வலை கூடாரங்கள் அல்லது கீற்று கொட்டகை அமைக்க வேண்டும்.
- பையின் அடிபகுதியில் தென்னை உரிமட்டை அல்லது உடைந்த செங்கல் பரப்ப வேண்டும்.
- தேர்வு செய்யப்பட்ட மக்கிய கழிவுகளை நிரப்ப வேண்டும்.
- 1 அடி உயரத்திற்கு 1 முறை சாணி கரைசல் தெளிக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்பட்ட மண்புழுவினை 3 கிலோ விட வேண்டும்.
- விலங்குகள் பறவைகள் சேதம் செய்யாமல் இருக்கவும் கழிவுகளில் ஈரப்பதம் தக்க வைக்கவும் சணல் சாக்கு அல்லது வைக்கோல் கரும்பு தோகை கொண்டு மூட வேண்டும்.
அறுவடை
- முதல் அறுவடை 20-30 நாட்களும் பிறகு வாரம் ஒரு முறையும் அறுவடை செய்யலாம்.
- உற்பத்தி திறன் 50-60 சதவீதம் (1 டன் கழிவுக்கு 500-600 கிலோ மண்புழு உரம் தயாரிக்கலாம்).
பயன்கள்:
- மண்புழு உரம் இடுவதால் மண்ணின் தன்மை மாறுபட்டு மண்ணின் வளம் அதிகரிக்கின்றன.
- பயிர் வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது.
- மண்ணில் நீர்பிடிப்பு திறன் அதிகரிக்கின்றன.
- மண்புழு உரத்தில்5% தழைச்சத்து, 0.5 % மணிச்சத்து, 0.56% சாம்பல்சத்து அடங்கியுள்ளன.
- வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு ஏக்கருக்கு 2 டன் மரம் மற்றும் பழ மர பயிர்களுக்கு மரம் ஒன்றுக்கு 5-10 கிலோ, பூ மற்றும் அழகு தாவரங்களுக்கு5-1 கிலோ வீதம் இடலாம்.
கவனிக்க வேண்டியவை:
- உற்பத்தி கூடங்களில் நேரடி வெயில் படாமல் மர நிழல் அல்லது கொட்டகை அமைத்து (20-25 டிகிரி) வெப்பநிலையில் உற்பத்தி செய்ய வேண்டும்.
- உற்பத்தி கிடங்கில் 60 சதவீதம் ஈரப்பத்தை நிலை நிறுத்த வேண்டும்.
- கிடங்கில் கூடுதல் நீர் தேங்காமல் வடிகால் வசதி அவசியம்.
உற்பத்திக்கான செலவு மற்றும் வருமானம் (ஒரு வருடத்திற்கு)
- செலவு – ரூ.10750/-
- வருமானம் – ரூ.16000/-
- நிகர லாபம் – ரூ.5250/-