அங்கக இடுப்பொருட்கள் தயாரித்தல்
மண்ணின் வளத்தை காக்க நாமே இயற்கை முறையில் நமது பண்ணையில் இருந்து கிடைக்கும் தாவரங்கள், களைச்செடிகள் மற்றும் கால்நடைகளின் அங்கக கழிவுகளை கொண்டு, பயிர்களுக்கு தேவையான பேரூட்டச்சத்துகள், நுண்ணுட்டச்சத்துகள், பயிர் வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கு தேவையான இயற்கை இடுப்பொருட்களை தயாரிக்கலாம். இதனால் மண்ணிலும், பயிர்களுக்கும் தரத்தின் அளவுகோலாக அடங்கியுள்ள கரிமப்பொருட்களின் அளவு அதிகரித்தல், மக்கும் பொருட்களை மண்ணில் கலப்பதுடன், மண்ணில் வாழும் நுண்ணுயிர்களும் பெருகி, மண்ணையும் பயிர்களையும் வளமாக்குகின்றன.
பஞ்சகாவ்யா தயாரிக்க தேவையான பொருட்கள்
v மாட்டு சாணம் – 7 கிலோ
v மாட்டு கோமியம் – 10 லிட்டர்
v பால் – 3 லிட்டர்
v தயிர் -2 லிட்டர்
v நெய் – 1 கிலோ
v வெல்லம் -3 கிலோ
v இளநீர் – 3 லிட்டர்
v வாழைப்பழம் -12 எண்ணிக்கை
v சுத்தமான தண்ணீர் – 10 லிட்டர்
முதல் நாள் நெய் மற்றும் பசுஞ் சாணத்தை நன்றாக பிசைந்து, 3 நாட்கள் வைக்க வேண்டும். 4-ம் நாள் மீதமுள்ள அனைத்து இடுப்பொருட்களையும் கலந்து 25 முதல் 30 நாட்கள் வரை பிளாஸ்டிக் டிரம்மில் வைக்க வேண்டும். தினந்தோறும் 2 அல்லது 3 வேளை நன்கு கலக்கிவிட வேண்டும்.
தயாரான பஞ்சகாவ்யா திரவத்தை 10 லிட்டருக்கு 30 மில்லி லிட்டர் அளவில் கலந்து பயிர்களுக்கு தெளிக்கவும்.
மூலிகை பூச்சி விரட்டி தயாரிக்க தேவையான பொருட்கள்
கிராமங்களில் கிடைக்கும் தாவரங்களான (கசப்பான (ம) உடைத்தால் பால் வரக்கூடிய இலைகள்)
· ஆடாதொடா
· நொச்சி
· வேம்பு
· எருக்கு
· சோற்றுக்கற்றாழை
· எட்டிக்கொட்டை
· பீச்சங்கு
தலா ஒரு கிலோ இலையை 10 லிட்டர் கோமியத்துடன் ஊற வைத்து, 14 முதல் 20 நாட்கள் கழித்து வடிகட்டிய மூலிகை பூச்சி விரட்டியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி அளவில் கலந்து பயிர்கள் மீது காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
மீன் அமிலம் தயாரிக்க தேவையான பொருட்கள்
Ø மீன் கழிவுகள் – 10 கிலோ
Ø வெல்லம் – 10 கிலோ
இரண்டையும் சரிபங்கு (1:1) அளவு கலந்து காற்று புகாமல் 30-40 நாட்கள் மூடிவைக்க வேண்டும். பின்பு வடிகட்டிய திரவத்தை பயிர்களுக்கு 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி லிட்டர் அளவில் கலந்து தெளிக்கலாம்.
பயன்கள்:
Ø மண்ணின் அங்கக தண்மை (ம) நுண்ணுயிர் செயல்பாட்டின் செயலை அதிகரித்தல்.
Ø அங்கக முறையில் விளைவிக்கப்படும் உணவு தானியங்கள் (ம) கால்நடை தீவனங்கள் நஞ்சின்றி கிடைக்கின்றன.
Ø நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்தல்.
Ø பேரூட்டச்சத்து, நுண்ணூட்டச்சத்து, பயிர்வளர்ச்சி ஊக்கி, களை கட்டுப்பாடு, நோய் மற்றும் பூச்சி மேலாண்மைக்கு பயன்படுகிறது.
Ø விவசாயத்தில் முக்கிய இடுப்பொருட்களின் செலவினங்கள் 50-60% குறைகின்றன.
Ø சுற்றுசூழலை பாதுகாத்து வளமான சூழ்நிலையை உருவாக்கின்றன.
Ø அங்கக இடுப்பொருட்கள் பயன்படுத்துவதால் 20-30% கூடுதல் மகசூல் கிடைக்கின்றன.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள 3 அங்கக இடுபொருட்களின் உற்பத்தி திறன்:
உற்பத்திகான செலவு மற்றும் வருமானம் (ஒரு வருடத்திற்கு)
· செலவு – ரூ 15000/–
· வரவு – ரூ 40000/–
நிகர லாபம் – ரூ 25000/–