சூரிய உலர்த்தி
குறைந்த விலையில் சூரியசக்தி கொண்டு உணவுப் பொருட்களை உலர்த்தும் தொழில்நுட்பம் சூரிய உலர்த்தி (solar dryer). இதில் சூரிய ஒளியை வெப்பமாக மாற்றி குடிலின் வெப்பம் அதிகரிக்கப்படுகிறது. இதனால் உள்ளே உள்ள பொருட்கள் எளிதில் குறைந்த நேரத்தில் உலர்கிறது. இவ்வாறு மிக குறைந்த நேரத்தில் உணவில் உள்ள நீரை வெளியேற்றுவதால் பொருளின் தரம், தன்மை குறைவதில்லை, பயறு வகைகள், எண்ணைய் வித்துக்கள் மற்றும் மருத்துவ பயிர்கள் அனைத்தையும் அதன் தன்மை மாறாமல் உலர்த்தலாம்.
அளவு
நீளம் – 33 அடி
அகலம் – 13 அடி
உயரம் – 7 அடி
உலர்த்தும் திறன் – 250 கிலோ
நேரடி வருமானம் – ரூ.10,000/மாதம்
இடம் தேர்வு
மேட்டுப்பாங்கான பகுதியில் மரங்கள் இல்லாத, வெயில் அதிகம் விழும் பகுதியாக தேர்வு செய்ய வேண்டும்.
சிறப்பு அம்சங்கள்
- மிக விரைவில் பொருட்கள் உலர்த்தப்படுகிறது. (உலர்த்தும் நேரம் குறைக்கப்படுகிறது)
- உணவுப்பொருட்களின் தரம், நிறம், தன்மை மாறாமல் நன்றாக இருக்கும்.
- உலர்த்தப்படும் பொருள் சுத்தமாக இருக்கும்.
- உணவுப்பொருள் தூசு மற்றும் மாசுபாட்டிலிருந்து பாதுக்காக்கப்படுகிறது.
- காற்றில் உணவு பறந்து வீணாவதில்லை.
- சத்துக்கள் வீணாவது குறைகிறது.
- தரமான பொருள் கிடைக்கிறது.
- விரைவில் பொருட்கள் உலர்வதால் பூஞ்சாணம் தாக்கம் இருப்பதில்லை
உலர்த்தும் பொருட்கள்
வெங்காயம், தக்காளி, பட்டாணி, உருளைக்கிழங்கு, வத்தல், காய்கறிகள், மிளகாய், தேங்காய், தானியங்கள், பயறு வகைகள், பழங்கள்.
காய்கறி வகைகள் | உலர ஆகும் நேரம் (தோராயமாக) |
கீரை வகைகள் | 4-5 மணி நேரம் |
காய்கறிகள் | 3-4 நாட்கள் |
பழங்கள் | 4-5 நாட்கள் |
உணவுப் பொருட்களை பதப்படுத்த உதவும் சூரிய உலர்த்தி (SOLAR DRYER)
உணவு மற்றும் விவசாய பொருட்கள் அதிகமாக வீணாகக் கூடிய இன்றைய காலக் கட்டத்தில் அதை நீண்ட நாட்கள் கெடாமல் பதப்படுத்தி பாதுகாத்து வைப்பது மிகவும் அவசியமானது. உணவு மற்றும் விவசாய பொருட்களை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்க நாம் பல பதப்படுத்துதல் முறைகளை கையாள்கிறோம். அதில் குறிப்பாக குளிர்பதனம் மூலம் பதப்படுத்தி பாதுகாப்பது மற்றும் வெயில் மூலம் பதப்படுத்தி பாதுகாப்பது. இதில் குளிர்பதன முறையை விட வெயிலில் பதப்படுத்துவதன் மூலம் உணவு மற்றும் விவசாய பொருட்களை நீண்ட நாட்கள் கெடாமலும், சத்துக்கள் வீணாகாமலும் பாதுகாக்கலாம். உதாரணமாக நாம் செய்யும் மாங்காய் வற்றல், கத்தரிக்காய் வற்றல், சுண்டைக்காய் வற்றல், மிளகாய் வற்றல், கீரை வகைகள், சில ஊறுகாய் வகைகள், கருவாடு போன்றவை வெயிலின் மூலம் பதப்படுத்தி பாதுகாக்கும் முறைகளாகும். இதேபோல பல உணவு மற்றும் விவசாய பொருட்களை வெயிலின் வெப்பத்தின் மூலம் பதப்படுத்தி பாதுகாக்கலாம். இது ஒரு வகையான மதிப்பு கூட்டுதல் முறையாகும்.
காய்கறி மற்றும் பழங்கள் | சூரிய உலர்த்தியில் உலர ஆகும் நேரம் (தோராயமாக) | எடை | உலர்ந்த பின்பு விலை /கிலோ (தோராயமாக) (ரூ) | |
உலராத (கிலோ) | உலர்ந்த (கிராம்) | |||
முருங்கை கீரை | 4-5 மணி | 1 | 100-120 | 150-200 |
கருவேப்பிலை | 4-5 மணி | 1 | 100-125 | 100-220 |
பச்சை மிளகாய் | 2 நாட்கள் | 1 | 110-130 | 200-220 |
கேரட் | 2 -3நாட்கள் | 1 | 120-140 | 150-200 |
தக்காளி | 2 நாட்கள் | 1 | 100-110 | 150-250 |
பாகற்காய் | 4 நாட்கள் | 1 | 200-300 | 210-250 |
பீட்ரூட் | 3-4 நாட்கள் | 1 | 100-150 | 320-350 |
வெங்காயம் | 1-2 நாட்கள் | 1 | 100-120 | 120-150 |
வெண்டை | 3-4 நாட்கள் | 1 | 200-250 | 200-280 |
சுண்டைக்காய் | 4 நாட்கள் | 1 | 120-150 | 300-400 |
வாழைப்பழம் | 4 நாட்கள் | 1 | 300-350 | 200-350 |
வெட்ட வெளி வெயிலில் காய வைப்பதால் ஏற்படும் தீமைகள்
வெட்ட வெளி வெயிலில் காயவைக்கும் போது பலவித பிரச்சனைகள் உள்ள. காற்றிலிருந்து வரும் மாவு, தூசி போன்றவை உணவுப் பொருட்களில் படிதல், பூச்சிகளின் தொல்லை, பூஞ்சைகள் தாக்கக் கூடிய வாய்ப்பு, அதிகமான ஈரப்பதம், பறவைகளின் மூலம் ஏற்படும் பொருட்களின் இழப்பு, பறவைகளின் எச்சம், இறக்கைகள் பொருட்களில் படிதல், வெப்பத்தின் அளவு அடிக்கடி மாறுபடுவதால் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுவை குறைதல். திடீர் மழையின் மூலம் பொருட்களில் சேதாரம் ஏற்படுதல் போன்றவை வெட்ட வெளியில் பதப்படுத்தலில் உள்ள பிரச்சனைகள் ஆகும்.
சூரிய உலர்த்தியின் செயல்முறைகள்
வெயிலின் வெப்பத்தில் உணவுப் பொருட்களை பதப்படுத்த இப்போது சூரிய உலர்த்தி (SOLAR DRYER) என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சூரிய உலர்த்தி தொழில்நுட்பத்தில் சூரிய வெப்பத்தை உள்வாங்க Solar Panel பயன்படுத்தப்படுகிறது. சூரிய உலர்த்தியில் வெப்பத்தை தக்க வைத்துக்கொள்ள ஒரு கூடாரம் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த கூடாம் பாலி கார்பனேட் (poly carbonate) மூலம் ஆனது.. கூடாரத்தின் அளவு நம் தேவைக்கு ஏற்ற அளவுகளில் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். Solar Panel-களின் மூலம் சூரிய வெப்பம் உட்கிரகிக்கப்பட்டு இந்த கூடாரத்தில் செலுத்தப்படுகிறது. சூரிய வெப்பத்தின் அளவு சுமார் 50 டிகிரியில் இருக்குமாறு இதில் அமைக்கப்பட்டுள்ளது. வெப்பத்தின் அளவை தீர்மானிக்க ஒரு sensor இதில் பொருத்தப்பட்டிருக்கும். வெப்பத்தின் அளவு 50 டிகிரிக்கு கீழே குறைந்தால் சூரிய உலர்த்தியில் பொருத்தப்பட்டிருக்கும் heater மூலம் வெப்பம் அதிகரிக்கப்படுகிறது. இதேபோல் வெப்பத்தின் அளவு 50 டிகிரிக்கு மேலே அதிகரித்தால் உலர்த்தியில் பொருத்தப்பட்டிருக்கும் Cooler மூலம் குளிர் காற்று செலுத்தப்படுகிறது. இந்த செயல் முறைகள் தானாக நடைபெறுமாறு தானியங்கி (Automation) தொழில்நுட்பம் சூரிய உலர்த்தியில் பயன்படுத்தப்படுகிறது.
சூரிய உலர்த்தியில் பதப்படுத்தும் பொருட்கள் வைப்பதற்கு பல அடுக்குத் தட்டுகள் (tray) பயன்படுத்தப்படுகிறது. கூடாரத்தின் உள் வெப்பம் அதிகமாக இருப்பதால் பதப்படுத்தும் பொருட்களை, கூடாரத்தில் நின்று காய வைப்பது சிரமமாக இருக்கும் என்ற காரணத்தினால் இந்த தட்டுகள் (tray) பயன்படுத்தப்படுகிறது. சூரிய உலர்த்தியில் அமைக்கப்பட்டிருக்கும் தரையின் நிறம் கருப்பு நிறத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
சூரிய உலர்த்தியின் நன்மைகள்
- சீரான வெப்பநிலை பராமரிக்கப்படுவதால் பதப்படுத்தும் பொருட்களின் சுவை அதிகரிக்கிறது.
- பதப்படுத்தும் பொருட்களின் தரம் அதிகரிக்கிறது.
- நிறம் ஒரே மாதிரியாக காணப்படுகிறது.
- பறவைகளின் மூலம் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது.
- பூஞ்சைகளின் தாக்குதல் இருக்காது.
- பூச்சிகளின் தொல்லை இருக்காது.
- காற்றின் மாசுக்கள் பொருட்களில் படியாது.
- திடீர் மழையினால் பொருட்களில் எவ்வித சேதாரமும் ஏற்படாது.
சூரிய உலர்த்தியின் மூலம் பதப்படுத்தக்கூடிய பொருட்கள்
பல்வேறுபட்ட பொருட்களை சூரிய உலர்த்தியில் பதப்படுத்தலாம். இப்போது வெங்காயம் (onion), தக்காளி (tomato), கீரை வகைகள் (moringa leaf, curry leaf, coriander and mint leaves, etc.,), மாங்காய் (Mango), உருளைகிழங்கு (potato), நெல்லிக்காய் (Amla), பாகற்காய், கொத்தவரங்காய், பலவித மூலிகை பொருட்கள் (ayurvedic herbs), குறிப்பாக ஸ்பைரிலூனா (spirulena), காளான் (mushroom), கருவாடு (Dry fish), இறால் (Prawn). மேலும் பல பொருட்கள் சூரிய உலர்த்தியில் காய வைத்து பதப்படுத்தப்படுகின்றன.
சூரிய உலர்த்தியில் காயவைத்து பதப்படுத்திய பொருட்களின் ஊட்ட சத்து அளவு, சுவை மற்றும் தரம் அதிகமாக இருப்பதால் சந்தையில் அதன் தேவையும், விலையும் அதிகமாக இருக்கிறது.
உலர் காய்கறி மற்றும் பழங்கள் | தயாரிக்கும் உணவு பொருட்கள் | |
கீரை வகைகள் | சாதப் பொடி, இட்லி பொடி, சூப் மிக்ஸ் |
|
காய்கறிகள் | வடகம், வத்தல், உடனடி குழம்பு மிக்ஸ், சூப் மிக்ஸ் |
|
பழங்கள் | உலர் பழங்கள், அத்தி, பழ பவுடர், ஜீஸ் மிக்ஸ் |
|