காளான் என்பது பூசண வகையைச் சேர்ந்த பச்சையில்லாத் தாவரமாகும். காளானில் ஒரு தண்டுப்பகுதியும் அதன் மேல் ஒரு தலைப்பகுதியும் காணப்படும். கிராம மகளிர் மற்றும் வேலையில்லா பட்டதாரிகள் காளான் வளர்ப்பை சுய தொழிலாக தொடங்கலாம். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு காளான் வளர்ப்பு உறுதுணையாக இருக்கும். புரதம் மற்றும் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட காளான்களை உட்கொள்ளுவதால் ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்கலாம்.