நாற்றங்கால் உற்பத்தி
முன்னுரை:
தோட்டக்கலை பயிர்கள் மனித உணவு முறைகளில் பழங்கள், காய்கறிகள் என முக்கிய பங்கு வகிக்கின்றது. தரமான பழங்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்ய வீரியமான மற்றும் தரமான கன்றுகள் உற்பத்தி செய்வது அவசியமாகும். தரமான தாய் கன்று உற்பத்தியே வளமான மகசூல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்;. தாய்கன்று மற்றும் ஒட்டு செடியை மரங்களின் மரபு பண்புகள், சூழ்நிலையை தாங்கி வளரும் தன்மையை வைத்தே தேர்வு செய்ய வேண்டும்.
நாற்றங்கால் அமைப்பதின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம்
தோட்டக்கலைபயிர்களில் பழ மரங்கள் அதிகபட்சமாக 100 வருடம் வரை வாழக்கூடியது. பழங்கள், காய்கறிகள் மனித சத்துக்கள், வைட்டமின்கள் தருவதில் அளவில்லா பங்கு வகிக்கிறது. பழப்பயிர்கள் பெரும்பாலும் விதையில்லா இனப்பெருக்க முறைகளான ஒட்டுக்கட்டுதல், தண்டு துண்டுகள், பதியன்கள், வின் பதியன்கள், மொட்டு கட்டுதல், திசு வளர்ப்பு முறைகளில் உற்பத்தி செய்வது அதிக வீரியமுள்ள நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. வீட்டுத் தோட்டம், புல் தரை மற்றும் அலங்கார தாவரங்கள் வளர்ப்பது வீட்டின் அழகையும், மன நிம்மதியையும் தரும். அலங்கார கன்றுகள் ரூ. 100 முதல் ரூ. 500 வரை விற்கப்படுவதால் நாற்றுகள் உற்பத்தி முக்கியத்துவம் பெருகிறது.